ஆத்தா உன் கோயிலிலே..! மழை வேண்டி யாகம் செய்யும் எடப்பாடியார்
தமிழகமே தண்ணீர் பிரச்சினையால் தவித்து வரும் நிலையில், தண்ணீர் கிடைக்க என்ன வழி என்று விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடியோ ஊரெல்லாம் மழைவேண்டி கோயில்களில் யாகம் செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நாளை 25 சிவவாக்கியர்கள் மற்றும் 4 ஓதுவார்களை கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மழை வேண்டி யாகம் நடைபெற உள்ளது.
மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கியமான பெரிய கோவில்களில் இது போன்ற மழை வேண்டி யாகங்களை நடத்த வேண்டுமென 53 மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபையில் விஞ்ஞானபூர்வமாக தண்ணீர் பெறுவதற்கான வழிகளை பற்றி நாள்முழுக்க பேசிவிட்டு, இந்த பக்கம் மழை வேண்டி யாகம் என முதலமைச்சர் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.