மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க இன்று கடைசி தினம் என்றும் இன்று மாலை 5 மணிக்குள் இணைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை கலந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்றும் டிசம்பர் 31ஆம் தேதி கடைசி தேதி என்றும் அதன் பிறகு ஜனவரி 31, பிப்ரவரி 15 என கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இதுவரை 2.8 கோடி பேர் இணைத்துள்ளதாகவும் இன்னும் 7 லட்சம் பேர் இணைக்காமல் இருப்பதாகவும் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 28ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்படுவதாகவும் மீதமுள்ள 7 லட்சம் பேரும் 28ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அதன் பிறகு கண்டிப்பாக அவகாசம் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
Edited by Siva