மாதாந்திர மின் கணக்கீடு எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..!
திமுக ஆட்சிக்கு வந்தால் மாதாந்திர மின் கணக்கீடு எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அக்கட்சி ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வருடம் ஆகியும் இன்னும் மாதாந்திர மின் கணக்கீடு எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் தெரிவித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாதாந்திர மின் கணக்கீட்டு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மின் கணக்கீடு செய்யும் பணியாளர்கள் பணியிடம் 50 சதவீதம் காலியாக இருப்பதால் இந்த திட்டம் தாமதமாகிறது என்றும் ஸ்மார்ட் மீட்டர் பணியை பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை அல்ல என்றும் முதல்வரின் கோட்டை என்றோம் அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்படாதது போல் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Edited by Siva