Daily Horoscope
✕

பேத்தி திருமண சர்ச்சை - வருத்தம் தெரிவித்த துரை முருகன்

Updated: வெள்ளி, 6 நவம்பர் 2026 (20:36 IST)
திமுக மூத்த தலைவர் மற்றும் பொருளாளர் துரைமுருகனின் பேத்தி செந்தாமரைக்கும் பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் கடந்த நவம்பர் 1ம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாமல் பல திரைப்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமணம் திராவிட இயக்க கொள்கைகளுக்கு மாறாக வேத மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி நடைபெற்றது. இது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியது..

பகுத்தறிவு பேசும் திமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் தனது இல்ல திருமண விழாவை வைதீக முறைப்படி நடத்தலாமா என பலரும் கேள்வி எழுப்பினர். திமுக ஆதரவாளர் வீரபாண்டியன் மற்றும் தி.க தலைவர் வீரமணி ஆகியோரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள துரைமுருகன் ‘எனது பேத்தியின் விருப்பப்படியே வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது. எனது பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான் வைதீக முறையில் திருமணத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை விவாதம் ஆக்கவோ, அரசியலாக்கவோ வேண்டாம்.. திருமணம் நடைபெற்ற முறைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்த ஏர்டெல்... பயணர்கள்

நூலகத்தை கட்டியது திமுக ஆட்சியில்.. 99.75 % வேலைகள் முடிந்ததும் திமுக ஆட்சியில்.. ஆனால் பழி மட்டும் தவெக ஆட்சியில்...

பிப்ரவரி 14ஆம் தேதி அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை.. ஆவணத்தை வெளியிட்ட தவெக அரசு வெளியீடு...

பெரியார் அறிவுலகம் நூலகத்தின் பணியை 99.75% நாங்கள் தான் முடித்தோம்: முக ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம்...

போலி புத்தகங்களில் எழுத்தாளர் பெயர்களில் ‘விஜய்’.. ஒரு எழுத்தாளர் பேரு திரிஷா விஜய்....

அடுத்த கட்டுரையில்