சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் போலி வாங்கிகள் செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் போலி வாங்கிகள் செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் போலி வங்கிகள் செயல்பட்டு உள்ளதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உண்மையான வங்கிகள் போலவே டெபாசிட் செலான் என செட்டப் செய்து இந்த வங்கிகள் இயங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த வங்கிகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும், இந்த வங்கிகளில் பலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இதுகுறித்து காவல் துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளது. போலி வாங்கி நடத்தி 2000 வாடிக்கையாளர்களை சேர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சென்னையை சேர்ந்த சந்திர போஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
மேலும் அவரிடம் இருந்து காவல்துறை ரூ.56 லட்சத்தை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரக வேளாண்மை கூட்டுறவு வங்கி என்ற பெயரில் சென்னை மதுரை ஈரோடு உள்பட 9 இடங்களில் இந்த வாங்கி நடத்தப்பட்டு வந்துள்ளதாக அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வந்துள்ளது.
Edited by Mahendran