சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்: முக்கிய அறிவிப்பு
கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னையை வெள்ளத்தில் மிதந்தது என்பதும் குறிப்பாக போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மழை நீர் இன்னும் ஒரு சில இடங்களில் தேங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது
இது குறித்து வெளியான செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரம் மழை பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்
சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் தி நகர், பசூல்லா சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலை - வாணி மஹால் சந்திப்பிலிருந்து பசூல்லா நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது