1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (10:10 IST)

பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி!

பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
 
அதன் துவக்க விழா இன்று காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. "COPஅவள்" என்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓட்டுனர் பயிற்சியை துவக்கி வைத்து நிகழ்ச்சி உரையாற்றினார்.முதல் கட்டமாக கோவை மாநகர தாலுகா காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 150 பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 
 
இதில் நான்கு சக்கர வாகனம் இரு சக்கர வாகனம் இரண்டிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்பட உள்ளது. ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். 
 
இந்த நிகழ்வில், கோவை மாநகர் ஆயுதப்படை காவல்துறை ஆணையர் முரளிதரன், தலைமையிட காவல் துணை ஆணையர் சுகாசினி, ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.