திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 8 மார்ச் 2023 (14:43 IST)

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு விடுமுறை: காவல் ஆணையர் அறிவிப்பு..!

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு விடுமுறை என மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் அவர்கள் அறிவித்துள்ளார்.
 
 இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் ஒருநாள் அனுமதியிடம் கூடிய விடுமுறையை மதுரையில் உள்ள பெண் காவலர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்க அடிப்படையில் இருந்தே மாற்றத்தை விதைக்க வேண்டும் என்றும் சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva