வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated: ஞாயிறு, 19 மார்ச் 2023 (12:43 IST)

ஆண் கைதிகளுடன் பாலியல் உறவு: 18 பெண் காவலர்கள் மீது விசாரணை..!

ஆண் கைதிகளுடன் பாலியல் உறவு கொண்டதாக 18 பெண் காவலர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலையில் 2100 ஆண் கைதிகள் உள்ள நிலையில் அங்கு 500 காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக உள்ளனர். இவர்களில் சில பெண் காவலர்கள் உள்ள நிலையில் அவர்கள் ஆண் கைதிகளுடன் நெருக்கமான உறவில் இருந்ததாகவும் ஆண் கைதிகளுடன் பாலியல் உறவில் இருந்ததாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து 18 பெண் காவலர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 15 பேர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
செல் உள்ளே உள்ள கைதிகளுடன் பாலியல் தொடர்பில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட செல்போன் புகைப்படங்கள் வைரல் ஆனதை அடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிறையில் உள்ள கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளது.
 
Edited by Siva