1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (08:57 IST)

ஓட்டுனர் உரிமம் உள்பட வாகன சான்றுகளை புதுப்பிக்க தேதி நீட்டிப்பு!

ஓட்டுனர் உரிமம் உள்பட அனைத்து வாகன சான்றிதழ்களையும் புதுப்பிக்க கால அவகாசம் நீடித்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு உத்தரவு, கனமழை உள்ளிட்ட பல காரணங்களால் ஓட்டுநர் உரிமம் உள்பட வாகன ஆவணங்களை புதுப்பிக்க அவ்வப்போது காலம் நீடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் பொது போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்களின் தகுதிச் சான்றிதழை புதுப்பிக்க டிசம்பர் 31 வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
இதன் காரணமாக அனைத்து ஆவணங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு பெறுதல், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், வாகன பதிவு செல்லுபடியாகும் கால அளவினை புதுப்பித்தல் ஆகியவற்றை டிசம்பர் 31ம் தேதிக்குள் செய்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.