1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (11:04 IST)

இரண்டு குழந்தைகள் அதிர்ச்சி மரணம்… புட் பாய்சன் காரணமா?

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுனரின் இரு குழந்தைகள் புட் பாய்சன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆட்டோ ஓட்டுனர் அன்சருக்கு சுரேயா என்ற மனைவியும் ஆஃப்ரின் என்ற பெண் குழந்தையும், அசேன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் ஆட்டோ ஓட்டி முடித்து வீட்டுக்கு வரும்போது பொறித்த மீன்களை குழந்தைகளுக்கு உணவாக வாங்கி வந்துள்ளார். அதை சாப்பிட்ட பின்னர் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர் மருந்து வாங்கி கொடுத்துள்ளார். ஆனாலும் உடல்நிலை மோசமாகியுள்ளது.

இதையடுத்து குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்த போது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து குழந்தைகளின் மரணத்துக்கு புட் பாய்சன் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். குழந்தைகளின் உடலை கூறாய்வு செய்வதற்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பிணக் கூறாய்வுக்கு பின்னரே உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும்.