வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (09:04 IST)

10% இட ஒதுக்கீடு மிகப்பெரிய சமூக அநீதி: டாக்டர் ராம்தாஸ்

பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்துவிட்ட நிலையில் இன்று அல்லது நாளை இதுகுறித்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தேசிய அளவில் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முற்பட்ட வகுப்பு மக்களின் வாக்குகளை பெறவே இந்த இட ஒதுக்கீடு திட்டம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, 'பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் அவர்களின் இந்த கருத்துக்கு பெரும்பாலான எதிர்ப்புகளும் ஒருசில ஆதரவு கமெண்ட்டுக்களும் பதிவாகி வருகிறது.