வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (10:32 IST)

கூட்டணிக்கு ரெடி; ஆள்தான் இல்லை – பாமக வின் டெலிகேட் பொஸிஷன்!

கடந்த 2 நாட்களாக கோவையில் நடைபெற்ற பா.ம.க வின் பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பா.ம.க. வின் பொதுக்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக கோவையில் நடைபெற்றது. அதில் பாமக வின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி கே மணி மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவுக்கு இரங்கல், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசிற்கு அளிக்கப்பட்ட அனுமதியைத் திரும்பப்பெறுதல், கஜா புயல் நிவாரண நிதியை விரைவாகப் பெறுதல் ஆகியப் பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பற்றி இதுவரை அறிவிக்காதப் பாமக இந்தக் கூட்டத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எந்தக் கட்சியோடு கூட்டணி என்று அறிவிக்காதப் போதிலும் தனித்துப் போட்டியிடாமல் கூட்டணிதான் என் சூசகமாக அறிவித்துள்ளனர். மேலும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரமும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.

பாமக கூட்டணிக்கு ஆசைப்பட்டாலும் அவர்களுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் ஆர்வம் காட்டாததுதான் சோகம். திமுக- விடுதலை சிறுத்தைகள்- காங்கிரஸ் கூட்டணி 99 சதவீதம் உறுதியாகிவிட்டது, கமலின் மக்கள் நீதி மய்யமும் காங்கிரஸுடன் உள் ஒதுக்கீடு மூலம் கூட்டணி அமைக்கப்போவதாக தெரிகிறது. அதிமுக முழுவதுமாக பாஜக வின் கைப்பிடிக்குள் இருப்பதால் அங்கேயும் கதவுகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் கூட்டணி அறிவிக்காத இரு கட்சிகளாக பாமக வும் தேமுதிக -வும் இருக்கின்றன. ஆனால் மக்கள் நலக் கூட்டணியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

இதனால் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்று பாமக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.