1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2023 (17:38 IST)

செந்தில் பாலாஜி, மு.க. ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்: டாக்டர் கிருஷ்ணசாமி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடர கவர்னரிடம் அனுமதி கேட்கப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 
 
டாஸ்மாக் மது விற்பனையில் ஒரு லட்சம் கோடி ஊழலுக்கு காரணமான செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி கேட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
அதேபோல் மது பாட்டில் விற்பனையில் பல கோடி ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு துணை போன முதலமைச்சர் முக ஸ்டாலிலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கவர்னரிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
மேலும் டாஸ்மாக் கடைகளை முழுவதாக மூட வேண்டும் என்றும் 19 மதுபான ஆலைகளையும் மூட வேண்டும் என்றும் மதுபான விற்பனை தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னரை வலியுறுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva