செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (15:20 IST)

ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் 3000 பக்க குற்றப்பத்திரிகை..!

arudhra
ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் 3000 பக்க குற்றப்பத்திரிகையை  சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
ரூ.2438 கோடி தொடர்புடைய ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில், 3000 பக்க குற்றப்பத்திரிகையை, சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
 
இவ்வழக்கில் இதுவரை பாஜக நிர்வாகி ஹரீஷ் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கின் விசாரணையில் 61 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்; 22 கார்கள், வங்கிக்கணக்கில் இருந்த ₹96 கோடி டெபாசிட், ₹103 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran