கிண்டி கலைஞர் நூற்றண்டு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து.. ஒருவர் கைது..!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவாருக்கு கத்தி குத்து ஏற்பட்டு உள்ள நிலையில் இதுகுறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் விக்னேஷ் என்பவரின் தாயார் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மருத்துவர் பாலாஜி என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் மருத்துவர் பாலாஜி தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் குற்றம் சாட்டிய நிலையில் திடீரென அவர் மருத்துவரின் கழுத்தும் காதின் பின்புறம்ம் நெற்றிம் முதுகு ஆகிய பல்வேறு பகுதிகளில் கத்தியால் குத்தியுள்ளார்,
இந்த நிலையில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் இருப்பதாகவும் அவர் ஏற்கனவே இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகு அவருடைய நிலை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த நிலையில் மருத்துவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்திடவும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தினோம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசு மருத்துவர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran