வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2024 (07:52 IST)

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அதிமுக செயல் வீரர் கூட்டம் நேற்று நடந்த நிலையில் இந்த கூட்டத்தை முடித்துவிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் திருமங்கலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அமமுக நிர்வாகிகள் சிலர் காரை மறித்ததாகவும் அவர்கள் டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் தெரிகிறது.

மேலும் ஆர்பி உதயகுமாரின் காரையும் அவர்கள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அதிமுகவினர் மூன்று பேர் காயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது


Edited by Siva