ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா... தனியார் மருத்துவமனையில் அனுமதி!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நாங்குநேரி அதிமுக எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.