வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (17:51 IST)

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங் எம்பிக்கள் பேரணி:

சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த வேளாண் மசோதாக்கள் முதலில் மக்களவையிலும் அதன்பிறகு மாநிலங்களவையிலும் அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே 
 
குரல் வாக்கெடுப்பின் மூலம் அமல்படுத்தப்பட்ட இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திமுக காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டனர் என்பதும் இதன் காரணமாக 8 எம்பி க்கள் மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் சற்று முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி பேரணி ஒன்றை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வேளாண் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க கூடாது என கோரிக்கை விடுத்து குடியரசு தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டாலும், குடியரசு தலைவர் கையெழுத்து போட்டால் மட்டுமே இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது