வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (17:38 IST)

கோட்டையில் பாஜக கொடியா... கலாய்த்து விட்ட எடப்பாடியார்??

கோட்டையில் எப்போதும் தேசியக் கொடி தான் பறக்கும், பாஜக கொடி பறக்காது என கேலி செய்துள்ளார் முதல்வர். 
 
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என்று கூறினார். அதேபோல சட்டசபையில் பாஜகவை சேர்ந்தவர்கள் இருப்பர் எனவும் நம்பிக்கையாக கூறி வருகிறார். 
 
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்ட போது, கோட்டையில் எப்போதும் தேசியக் கொடி தான் பறக்கும். இதேபோன்று தமிழகத்தில் எப்போதும் அதிமுக கொடி தான் பறக்கும். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று பதிலளித்தார்.