திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (19:58 IST)

ஜூலை 16ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!

ஜூலை 16ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார் 
 
ஜூலை 16ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அந்த சமயத்தில் திமுக எம்பிக்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் எம்பிகள் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. வரும் ஜூலை 19 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதனை அடுத்து இந்த கூட்டத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த கூட்டத்தில் திமுக எம்பிக்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.