வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 நவம்பர் 2020 (08:27 IST)

தற்கொலையா? சுகர் கம்மி ஆகிருச்சுங்க... பூங்கோதை ட்விட்!!

நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது என திமுக எம்எல்ஏ பூங்கோதை டிவிட்டரில் பதிவு. 
 
கட்சியில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு நெல்லையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ பூங்கோதை, உயர்தர சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து  என்னை பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இரத்த பரிசோதனையில் என் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு மூளை, நெஞ்சு சி.டி ஸ்கான் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
 
இதுதன நடந்தது ஆனால் இந்த உண்மைச் சம்பவத்தை மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது. 15 ஆண்டுகள் அரசியலில் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் என்னை தன் மகளைப் போல் பாசத்துடன் நடத்தினார். அதேபோல கழகத் தலைவர் ஸ்டாலின் அண்ணனும் என் மீது பாசமாக இருக்கிறார். 
 
எனவே, எனக்கு மருத்துவ ரீதியாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து தயவு கூர்ந்து இத்தகைய தவறான வதந்திகளைப் பரப்பி என்னை வளர்த்துள்ள கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம். கழகத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.