ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (17:42 IST)

பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் கைது...போலீஸார் அதிரடி

திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு, சட்ட மன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், விடியலை நோக்கி என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின்  திருக்குவளையில் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆயத்தமானார்,. அவருக்கு தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், தற்போது திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.