Daily Horoscope
✕

ஜெ அன்பழகன் மீண்டும் கவலைக்கிடம்: அதிர்ச்சியில் தொண்டர்கள்

Updated: திங்கள், 8 ஜூன் 2020 (19:56 IST)
கொரோனா சிகிச்சைக்காக கடந்த 2ஆம் தேதி சென்னை கொரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது. ஆனால் அவரது நேற்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததாகவும், இன்று அவர் கண்விழித்து பார்த்ததாகவும் தகவல்கள் வெளிவந்ததால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான மருத்துவமனையின் அறிக்கையின்படி ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
ஜெ.அன்பழகன் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என திமுக தொண்டர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இருப்பினும் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்று திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

எனக்கும், என் மனைவிக்கும் 600 கோடி சொத்து இருக்கு!.. நீதிமன்றத்தில் விஜய் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!.. பதிவான வாக்குகள் எவ்வளவு?

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்!.. சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் அப்டேட்...

எரிபொருள் விலை எதிரொலி!... விமான கட்டணம் உயர்வு!...

AI, கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களில் நுழைகிறது ஜியோ.. ஜியோபிரைன்' என்ற சொந்த AI தளம்..

அடுத்த கட்டுரையில்
Show comments