வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (12:46 IST)

தொடர் முன்னிலையில் திமுக - கனவு கோட்டையில் அமர போகிறாரா ஸ்டாலின்?

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் ஆளும் கட்சி அதிமுகவை விட திமுக முன்னிலை வகிக்கிறது. 
 
தேர்தல் ஆணையம் வெளியிட்ட 231 தொகுதிகளுக்கான முன்நிலை நிலவரத்தில் வெற்றிக்குத் தேவையான 118 இடங்களை திமுக மட்டுமே பெற்றுள்ளது. அதே நேரம் அதிமுக 79 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மேலும், 137 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 93 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 
 
ஆக ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை தாண்டி 132 இடங்களுக்கும் அதிகமாக திமுக தொடர் முன்னிலை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மையம் ஓர் இடத்தில் முன்னிலை வகித்திருப்பது கூடுதல் தகவல்.