அதிமுக மோதலுக்கும் திமுகவுக்கும் சம்பந்தமில்லை- ஆர்.எஸ். பாரதி
அதிமுக மோதலுக்கும் திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.ஏஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே நடைபெற்ற சர்ச்சையின் உச்சகட்டமாக என்று பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதுமட்டுமின்றி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விரைவில் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சித்துணைத்தலைவர் பதவியில் இருந்த நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகிறது. இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை அழிக்க முதலமைச்சர் ஸ்டாலின் சதி செய்து வருவதாக அதிமுக கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதிமுக மோதலுக்கும் திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.ஏஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: யார் மீதோ உள்ள கோபத்தை திமுகவின் பக்கமாய்க் கட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி. வருமான வரிச்சோதனையை கண்டிக்க தெம்பின்றி திமுகவை குற்றம் சொல்கிறார். சட்டம் ஒழுங்கு காரணமாகத்தான் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேன்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.