நாளை 3 மாவட்டங்களில் கனமழை: பொங்கல் கொண்டாட்டம் பாதிக்குமா?
பொங்கல் தினத்தில் அதாவது நாளை, மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த மாவட்டங்களில் பொங்கல் கொண்டாட்டம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் நாளை 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று குறிப்பாக மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் பொங்கல் கொண்டாட்டத்தை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், இன்று தமிழக கடலோரப் பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், உள் தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று அதிகாலை சென்னையில் லேசான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran