Daily Horoscope
✕

திமுகவில் விழுந்த பழைய விக்கெட்: அதிமுகவுக்கு எண்ட்ரி!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 3 மார்ச் 2020 (13:43 IST)
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர் என்.கே.பெருமாள் மற்றும் வரதராஜ பெருமாள். 
 
திமுகவை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட அவைத்தலைவரும், விளாத்திகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.கே.பெருமாள் மற்றும் விளாத்திகுளம் பெருந்தலைவர் வரதராஜ பெருமாள் ஆகியோர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளனர். 
 
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தற்போது வரை நடந்த தேர்தல்களில் அதிமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே, தொகுதியை பொறுத்தவரை திமுகவில் இருப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர் என கூறப்படுகிறது. 
 
ஆனால், சிலரோ திமுக சார்பில் வழங்கப்ப்ட்ட பதவிகளில் திருப்தி ஏற்படாத காரணத்தால் இவர்கள் அதிமுகவில் இணைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

எல்லாம் காட்டு

சென்னையின் மூன்று முக்கிய பகுதிகளில் நவீன விளையாட்டு வசதிகள்.. மின்னணு டெண்டர் வெளியீடு..

போரூர் முதல் பூந்தமல்லி வரை இனி நோ டிராபிக்.. கீழே சாலை, நடுவில் மேம்பாலம், மேலே மெட்ரோ ரயில்..

காலம் காத்திருந்து பதில் சொல்லிவிட்டது.. விஜய் வந்தவுடன் எழுந்து வரவேற்ற ரஜினிகாந்த்...

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. வைரல் போட்டோ...

அடுத்த கட்டுரையில்
Show comments