வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (18:44 IST)

இது முதல்வர் ஐடியாவே இல்லை!? – உண்மையை உடைக்கும் துரைமுருகன்!

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், ’இது நீங்கள் சுயமாக யோசித்த திட்டம்தானா?’ என கேள்வியெழுப்பியுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன்.

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கூட்டத்தில் பேசும்போது பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக பயன்பாட்டில் உள்ள கால்வாய்கள் அடிக்கடி சேதமடைவதால் குழாய்கள் அமைத்து அதன் மூலம் தண்ணீர் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு 3000 கோடி வரை செலவாகும் எனவும் தெரிவித்தார்.

இதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் “கண்டலேறு அணையிலிருந்து குழாய் மூலம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர பல்வேறு யோசனைகள் இருந்தபோது அதிமுக தான் கால்வாய் திட்டத்தை அமல்ப்படுத்தியது. அப்போதிருந்தே கால்வாய்களில் பலமுறை சேதாரம் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பெருவாரியான நீரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

அப்போதே இந்த நிலையை அறிந்த புட்டபர்த்தி சாய்பாபா, வாய்க்கால்களுக்கு பதிலாக குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு வரலாம் எனவும், அதற்கான செலவை தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அதிமுக அரசு குழாய் அமைக்கு அளவுக்கு அதன் நிலப்பகுதி சரிவாக இல்லை என்று கூறி அதை நிராகரித்தார்கள்.

இப்போது மட்டும் எப்படி இதை செயல்படுத்துவார்கள். இப்போது நிலம் சரிவாக இருக்கிறதா? இதற்கு 3000 கோடி செலவு செய்வதாக வேறு கூறியிருக்கிறார்கள். நல்ல வேட்டைதான்” என கூறியிருக்கிறார்.