ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (20:15 IST)

அதிமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்! – தேர்தல் ஆணையத்தில் திமுக எம்.எல்.ஏ மனு!

அதிமுகவின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென திமுக எம்.எல்.ஏ சரவணன் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கை ரேகையை போலியாக பயன்படுத்தி வேட்புமனு தாக்கல் செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இடைதேர்தல் சமயம் ஜெயலலிதா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்த வழக்கு விசாரணையில் அது உண்மைதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பதை சுட்டிக்காட்டி மனு அளித்திருக்கிறார் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன்.

தேர்தல் ஆணையத்து அவர் அளித்த மனுவில் தேர்தல் காலங்களில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றாலோ, மீறியிருந்தாலோ அந்த கட்சியின் சின்னத்தையும், அங்கீகாரத்தை நீக்குவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. போலி கை ரேகை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.