திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 மே 2023 (14:47 IST)

அகில இந்திய வானொலிக்கு பதிலாக ஆகாஷ்வாணி: திமுக கடும் எதிர்ப்பு..!

அகில இந்திய வானொலி நிலையம் என்பதற்கு பதிலாக இனி ஆகாஷ்வாணி என்று அழைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என திமுக எம்பி டிஆர் பாலு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அகில இந்திய வானொலியின் அறிவிப்புகள் செய்திகள் மற்றும் கடிதங்களில் இனி ஆல் இந்தியா ரேடியோ என பயன்படுத்தக்கூடாது என்றும் அதற்கு பதிலாக ஆகாஷ் வாணி என்று தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அனைத்து வானொலி நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிஆர் பாலு எழுதிய கடிதத்தில் ஆல் இந்தியா ரேடியோ என்ற பயன்பாட்டிற்கு பதிலாக ஆகாஷ்வாணி என குறிப்பிடுவது வானொலி நிலையங்களில் ஹிந்தியை திணிப்பதாகும் என்றும் இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
Edited by Siva