1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (16:50 IST)

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய டிஆர் பாலு..!

TR Balu
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு இன்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாக ஆன்லைன் தடை மசோதா குறித்து பேசிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய போது ’ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நான்கு மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல என்று தெரிவித்தார். 
 
மேலும் ஆளுநரின் செயலை மத்திய அரசு கண்டும் காணாதது போல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாது என்று கூற ஆளுநருக்கு உரிமை இல்லை என்று கூறிய டிஆர் பாலு மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran