புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (22:24 IST)

உள்ளாட்சி தேர்தலை அதிமுக-திமுக விரும்பவில்லை: போட்டு உடைத்த தனியரசு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் இந்த தேர்தலை திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே விரும்பவில்லை என தனியரசு எம்எல்ஏ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட தனியரசு எம்எல்ஏ உள்ளாட்சித் தேர்தலை திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே விரும்பவில்லை என்றும், இந்தத் தேர்தலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்துக் கொடுப்பது என்பது இரு கட்சிகளுக்குமே ஒரு பெரிய தலைவலி என்றும், இந்த தொகுதிகள் பிரிப்பதில் ஏதாவது பிரச்சினை நடந்தால் அந்த கட்சிகள் கருத்து வேறுபாடுகள் பிரிய வாய்ப்பு உள்ளது என்றும், அது அடுத்து வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பெரும் பாதிப்பாக அமையும் என்றும், எனவே முடிந்தவரை உள்ளாட்சி தேர்தல் நடக்காமலிருக்க செய்யவே இந்த இரு கட்சிகளும் விரும்புகின்றனர் என்று கூறினார் 
 
தனியரசு எம்எல்ஏ கருத்துக்கு அதிமுக மற்றும் திமுக சார்பில் உள்ளவர்கள் மறுப்பு தெரிவித்து வந்தாலும் தனியரசு அவர்கள் வெள்ளந்தியாக உண்மை நிலையை போட்டு உடைத்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்