1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (12:57 IST)

இவருக்கு இருந்த கெத்து எவனுக்கும் இல்ல.. கேப்டனுக்காக வரிந்துக்கட்டும் சீமான்

விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் பாராட்டுக்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 1996 ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக அருகில் மூப்பனாரை வைத்துக்கொண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்த ரஜினிகாந்த் அதன்பிறகு ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். 
 
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது துணிச்சலுடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆளுமைமிக்கவர். அவர்கள் மாண்ட பின்னர் வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வந்தேன் என்று சொல்பவர்கள் ஆளுமை மிக்கவர்கள் அல்ல என்று சீமான்  ரஜினியை விமர்சித்துள்ளார். 
 
சீமான் சமீப காலமாகவே ரஜினி கன்னடர் அவர் தமிழகத்தை ஆளக்கூடாது, ரஜினிக்கு விருது கொடுத்தது பாஜவுக்கு அவர் வேண்டியவர் என்பதால்தான் என பல முறை தொடர்ச்சியாக ரஜியை விமர்சித்த வண்ணம் உள்ளார்.