ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (09:04 IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்.. தொண்டர்கள் அதிர்ச்சி..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை பின்னடைவில் இருப்பதாக தகவல் வெளியானது. 
 
இதனை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர்  வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி விஜயகாந்த் காலமானார். இந்த தகவல் தெரிந்தவுடன் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை வளாகத்தில் குவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva