வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (07:12 IST)

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி… வெண்டிலேட்டர் வைக்க முடிவு!

சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் வீடு திரும்பினார். அதன் பின்னர் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.

கலந்துகொண்டாலும், அவர் அந்த நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. மேலும் சுயநினைவின்றியே அவர் இருப்பது போலவே அந்த நிகழ்ச்சி முழுவதும் பிறர் உதவியோடு அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் தேமுதிகவினர் அரசியல் லாபத்துக்காக விஜயகாந்தை வதைப்பதாகக் குற்றம்சாட்டினர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக “அவரை எப்படி பார்த்துக் கொள்வது என எங்களுக்கு தெரியும்” என தேமுதிகவின் புதிய பொதுச் செயலாளர் பிரேமலதா காட்டமாக பதிலளித்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.