ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (14:18 IST)

விஜயகாந்த் உடல் நிலைக்கு காரணம் எம்.எல்.ஏக்கள் செய்த துரோகம் தான்: பிரேமலதா

எதிர்க்கட்சியாக இருந்தபோது விஜயகாந்த் யாருக்கெல்லாம் எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் எல்லாம் துரோகம் செய்து விட்டார்கள் என்றும், துரோகத்தின் வலியும் விஜயகாந்த் உடல் நிலைக்கு காரணம் என்று சொல்லலாம் என்றும் தேமுதிக பொதுச்செயலாளராக பதவியேற்ற பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 
மேலும், அரசியல் என்பது சவால் தான், பெண்கள் அரசியலில் சந்திக்கின்ற சவால்கள் ஏராளம் என்று கூறிய அவர், தமிழகத்தில் தேமுதிக எந்த நோக்கத்திற்காக  ஆரம்பிக்கப்பட்டதோ அதனை நிறைவு செய்வதுதான் எனது லட்சியம் என்றும் கூறினார்,
 
மேலும் தேமுதிக கட்சி தொண்டர்கள், விஜயகாந்த் உள்ளிட்டோர் ஆணைக்கிணங்க பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ளேன் என்றும், எங்களை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு வெற்றிக்கான வியூகத்தை மட்டுமே வகுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்,.
 
Edited by Mahendran