Daily Horoscope
✕

தேமுதிக வேட்பாளர் பட்டியல் எப்போது? எல்.கே.சுதீஷ் தகவல்!

Written By siva
Updated: வெள்ளி, 12 மார்ச் 2021 (20:22 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து திடீரென வெளியேறியது. தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறியது 
 
அதன்பின் அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தற்போது கிட்டதட்ட தனித்துவிடப்பட்டதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தொகுதி உடன்பாடுகளை முடித்துவிட்டு வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்திற்கு சென்றுள்ள நிலையில் தேமுதிக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தேமுதிக வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் அறிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் தேமுதிகவில் இதுவரை கூட்டணி குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதால் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments