வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2024 (10:16 IST)

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்.. தீபாவளி நெரிசலை சமாளிக்க நடவடிக்கை..!

Metro Rail
தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க, 3.5 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள், அதாவது அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், நேற்று முதல் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் மூலம் சொந்த ஊர் செல்வதால் அனைத்து இடங்களிலும்  கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் மூலம் பேருந்து நிலையம், விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு எளிதாக செல்வதற்கு ஏராளமானோர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.

இந்த கூட்ட நெரிசலை சமாளிக்க, 3.5  நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது இரண்டு வழித்தடங்களிலும் 6 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாகவும், பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran