திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (16:43 IST)

தீபாவளிக்கு செல்லும் 5 வைல்டுகார்டு போட்டியாளர்கள்.. யார் யார்.. முழு விவரங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதுவரை ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது, பிக் பாஸ் வீட்டில் 15 பேர் உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மேலும் 5 போட்டியாளர்கள் உள்ளே செல்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியேறிய அர்னவ் முன்னாள் தலைவி திவ்யா, குக் வித் கோமாளியின் ஷாலின் ஜோயா, விஜய் டிவியின் டிஎஸ்கே மற்றும் பாடகி ஸ்வாகதா, நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் என கூறப்படுகிறது.
 
ஏற்கனவே ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளாக பிரிக்கப்பட்ட நிலையில், டிஎஸ்கே தவிர மற்ற வைல்ட்கார்டு போட்டியாளர்கள் அனைவரும் பெண்கள் என்பதால் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், இந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு புதிய சுவாரஸ்யத்தை சேர்க்கலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
 
15 போட்டியாளர்களுடன் இருந்த பிக் பாஸ் வீடு, மேலும் 5 போட்டியாளர்களின் வருகையால் மொத்தம் 20 பேர் அடங்கிய புதிய கட்டத்தை நோக்கி நகர்வதால், நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்ததைப் போன்ற சுவாரஸ்யம் மீண்டும் பெறும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Edited by Mahendran