அடுத்த கட்டத்துக்கு செல்லும் விடாமுயற்சி… அப்டேட்டைக் கொடுத்த படக்குழு!
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லிஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.
படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ள போதும், இதுவரை படக்குழு உறுதியாக ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. நேற்று பூஜையோடு டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில் அது சம்மந்தமான புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.