ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2024 (09:55 IST)

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ்: அதிரடி அறிவிப்பு!

Metro Train
சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய 11 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போது தான் போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அறிவிப்பின் மூலம் நான்-எக்ஸிகியூட்டிவ் பணியாளர்களுக்கு ரூ. 15,000 தீபாவளி போனஸ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியு மற்றும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.


Edited by Siva