வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (11:34 IST)

பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது

பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. 

 
பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University), சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகம் ஆகும். 
 
இந்நிலையில் பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் சேர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முன் அனுமதி பெறாமல் தொலைதூர பட்டப் படிப்புகளை விசாரிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.