1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 மே 2023 (16:04 IST)

அண்ணாமலை எந்த காலத்திலும் நேர்மையாக அரசியல் செய்ய மாட்டார்: இயக்குநர் அமீர்

அண்ணாமலை எந்த காலத்திலும் நேர்மையான அரசியல் செய்ய மாட்டார் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். 
 
கரூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு தலைவராக பார்க்கவில்லை என்றும் அவர் பாஜகவில் இருப்பதால் மட்டும் என்று சொல்லவில்லை காங்கிரஸில் அவர் இருந்தாலும் இப்படித்தான் சொல்வேன் என்றும் தெரிவித்தார். 
 
தமிழகத்தில் திடீரென அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று அண்ணாமலை கூறி வருகிறார் என்றும் ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்றவர் தற்போது சொத்து பட்டியலை தான் வெளியிட்டுள்ளார் என்றும் அண்ணாமலை என்றைக்குமே நேர்மையான அரசியல் செய்ய மாட்டார் என்றும் இயக்குனர் அமீர் கூறினார். 
 
மேலும் அவரை தமிழகத்தின் மீதோ, தமிழ் மொழியின் மீதோ, அக்கறை கொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran