ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (19:25 IST)

பாஜக எம்பியை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் -மல்யுத்த வீராங்கனைகள்

wrestlers
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான  பிரிஜ் பூஷன் (66)சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம்  இந்தியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், 3 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ள குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில்,  பேர் கொண்ட கமிட்டியை அமைத்தார்.

இந்த விசாரணை முடிவும் வரை தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷ்ணை விலகி இருக்கவும் உத்தரவிட்ட்டுள்ளார்.

ஆனால், இப்புகார்களை பிரிஜ் பூசன் மறுத்துள்ளார். பதவியில் இருந்து விலக முடியாது எனக் கூறினார்.   பேர் கொண்ட குழு மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்பித்த நிலையில், இதுவரை அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 23 ஆம் தேதி முதல் வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,இதுகுறித்து 8 மல்யுத்த வீராங்கனைகள் சுப்ரீம் கோர்வில் மனுதாக்கல் செய்தனர்.

இம்மனுவை ஏற்ற நீதிமன்றம்,  தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில்  இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.  டெல்லி போலீஸ் தரப்பில் எம்பி பிரிஜ் பூஷன் மீது வழக்குப் பதிவு செய்வதாக உறுதியளித்தனர்.

ஆனால், மலுயுத்த வீராங்கனைகள் டெல்லி போலீஸ் மீது  நம்பிக்கையில்லை எனவும்,  அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளனர்.