வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2023 (14:00 IST)

48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி எம்.பி. நோட்டீஸ்..!

48 மணி நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக எம்பி கனிமொழி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தரப்பிலிருந்தும் உதயநிதி மற்றும் டி ஆர் பாலு தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ்க்கு பதிலளித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது என்று பதில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 
 
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி 48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கலைஞர் டிவியில் தனக்கு பங்கு இல்லை என்றும் அவதூறு பரப்பியது தொடர்பாக அண்ணாமலை மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் ஒரு கோடி இழப்பீடு அவர் செலுத்த வேண்டிய நிலை வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran