38 தொகுதிகளில் போட்டி என தினகரன் அறிவிப்பு! மீதி 2 இடம் கமலுக்கா?
ஒரு பக்கம் அதிமுக கூட்டணி, இன்னொரு பக்கம் திமுக கூட்டணி இதற்கிடையில் எந்த கூட்டணியில் இணைவது என்ற குழப்பத்தில் தேமுதிக என தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது
இந்த நிலையில் அமமுக தலைமையில் ஒருபுதிய கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே அந்த கட்சியை கூட்டணிக்கும் அழைக்கவில்லை, அந்த கட்சியின் தலைமையில் கூட்டணி சேரவும் இதுவரை முன்வரவில்லை
இந்த நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 'வரும் நாடாளுமன்ற தேர்தலில், 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என்றும், மக்களால் விமர்சிக்கப்படாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் வைப்போம் என்றும் கூறியுள்ளார். மக்களால் விமர்சிக்கப்படாத கட்சி ஒன்று உலகில் உண்டா? என்பதை தினகரன் விளக்க வேண்டும்
மேலும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன் அக்கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தவில்லை என்று கூறினார். மேலும் 38 இடங்களில் மட்டுமே போட்டியிடுவேன் என்று தினகரன் கூறியுள்ளதால் மீதி 2 தொகுதிகள் யாருக்கு என்ற சஸ்பென்ஸ் எழுந்துள்ளது. அனேகமாக அது கமல் கட்சிக்கு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.