1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (18:47 IST)

தருமபுரி தொகுதியில் திடீர் ட்விஸ்ட்.. அன்புமணி மனைவி செளமியா போட்டி..!

பாரதிய ஜனதா கட்சியை கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் ஒன்பது தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த 9 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர் இதோ: 
 
1. திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
2. அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
3. ஆரணி – முனைவர் அ. கணேஷ் குமார்
4. கடலூர் – திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான்
5. மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
6. கள்ளக்குறிச்சி – இரா.தேவதாஸ்
7. தர்மபுரி – அரசாங்கம்
8. சேலம் – ந. அண்ணாதுரை
9. விழுப்புரம் – முரளி சங்கர்
 
அதில் தர்மபுரி தொகுதிக்கு அரசாங்கம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென அவர் மாற்றப்பட்டு பாமக தலைவர் அன்புமணி மனைவி சௌமியா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று காலை வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் மாவட்ட செயலாளார் அரசாங்கம் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அன்புமணி மனைவி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது திடீர் ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran