Daily Horoscope
✕

கட்சிக்காக 5 பேரை தேர்வு செய்து கொடுத்த தனுஷ்?!.. விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு!..

Updated: ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2026 (12:44 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என வலம் வருபவர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதுவரை நான்கு தேசிய விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்
.
இந்நிலையில்தான் சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தற்போது நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கும் நிலையில் தனுசுக்கும் அரசியலில் மீது ஆசை வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த அவர் பிறந்த நாள் விழாவில் பேசிய தனுஷ் அவரது ரசிகர்களிடம் ‘நாம் இப்படியே இருக்க கூடாது.. மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.. நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்’ என அவர் பேசியிருந்தார்..

இதையடுத்து, தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என பல ஊடகங்களும் செய்து வெளியிட்டன. ஆனால் தற்போது வரை தனுஷ் தரப்பிலிருந்து இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.
இந்நிலையில் கட்சிக்காக ஐந்து பெயர்களை தேர்வு செய்து கொடுத்திருக்கும் தனுஷ் கட்சியை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வழக்கறிஞர்களை டெல்லிக்கு அனுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அர்ஜூன் தொடர்ந்த வழக்கு!.. பயில்வான் ரங்கநாதன் கைதாவாரா?....

எல்லாம் பகல் வேஷமா?!.. விளைவு மோசமாக இருக்கும்!.. விஜயை எச்சரித்த நயினார் நாகேந்திரன்..

அதள பாதாளத்திற்கு சென்ற இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் சுமார் 1500 புள்ளிகள் சரிவு...

அன்பில் மகேஷை பார்க்க வந்த கனிமொழி எம்பி.. புழல் சிறையில் பரபரப்பு...

திருமண மோசடி புகார்.. தலைமறைவான முத்துக்குமரனை தேடும் போலீஸ்...

அடுத்த கட்டுரையில்
Show comments