1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor dhanush advice to students about mother tongue

ரொம்ப கஷ்டமா இருக்கு!. இது உங்களுக்கு அவமானம்!... தனுஷ் கோபம்!..

dhanush
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் தொடந்து பல படங்களிலும் நடித்து கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாறினார். ஒருபக்கம் சீரியஸான படங்களில் நடிக்கும் தனுஷ் மறு பக்கம் கமர்ஷியல் மசாலா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதேநேரம், அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான கர திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை.

எனவே தற்போது அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது. இந்த படத்திற்கு பின் லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து  இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் தனுஷ் ‘நாங்கலாம் படிக்கிற காலத்தில் தப்பு தப்பா இங்கிலீஷ் பேசுவோம்.. ஆனால் தமிழ் நல்லா தெரியும்.. ஆனா இப்போ பத்தில் எட்டு பேருக்கு தமிழ் எழுத படிக்கவே தெரியல.. ஆனா இங்கிலீஷ் பேசுறாங்க.. எழுதுறாங்க.. ரொம்ப வருத்தமான விஷயம் இது.. உங்க தாய் மொழி. இதுதான் உங்களுக்கு முதல்ல தெரியணும்.. தமிழ் எழுத படிக்க தெரிஞ்சுக்கணும்.. தமிழ் வரலைன்னு சொல்றது பெருமை இல்லை.. அது ஒரு அவமானம்’ என மாணவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஹார்ட் பீட் 3-ல் புதிய திருப்பம்.. இந்த வார புரோமோவில் களமிறங்கிய காயத்ரி!